ஒரே கணக்குகள் மையத்தில் உள்ள உங்கள் கணக்குகள் அனைத்திலும் உங்கள் தகவல்களை நாங்கள் பயன்படுத்தும் விதம்
கணக்குகளை ஒரே கணக்குகள் மையத்தில் சேர்த்தல் என்பது உங்கள் கணக்குகளை அணுகுவதற்கு ஒரே உள்நுழைவுத் தகவலைப் பயன்படுத்துதல் போன்ற எங்களின் தயாரிப்புகள் அனைத்திலும் செயல்படும் அம்சங்களைப் பயன்படுத்த உதவுகிறது.
வெவ்வேறு Meta நிறுவனத் தயாரிப்புகளில் இந்தக் கணக்குகள் மையத்தில் உள்ள கணக்குகள் அனைத்திலும் உங்கள் தகவலை நாங்கள் ஒருங்கிணைப்போம். இதனைப் பின்வரும் விஷயங்களுக்காக நாங்கள் பயன்படுத்துவோம்:
- ஸ்டோரிகள் மற்றும் ரீல்ஸ் போன்றவற்றில் நாங்கள் உங்களுக்கு விளம்பரங்களைக் காட்டினால், உங்களுக்கும் பிறருக்கும் அவற்றை நபருக்கேற்றபடியாக்குவோம். அத்துடன், அவை எவ்வாறு செயல்படுகின்றன என்பதை அளவிடுவோம். அதாவது பின்வருவன போன்ற விஷயங்களை நாங்கள் மேற்கொள்கிறோம்:
- உங்களது சுயவிவரத் தகவல்கள் மற்றும் உங்கள் கணக்குகள் அனைத்திலும் நீங்கள் மேற்கொள்ளும் செயல்பாட்டின் அடிப்படையில் Facebook மற்றும் Instagram இல் மிகவும் தொடர்புடைய விளம்பரங்களைக் காண்பித்தல்.
- உங்களுக்கும், பிறருக்கும் பகிர்வுகள் மற்றும் பரிந்துரைகளை நாங்கள் நபருக்கேற்ப தேர்வுசெய்வோம். அதாவது பின்வருவன போன்ற விஷயங்களை நாங்கள் மேற்கொள்கிறோம்:
- Facebook அல்லது Instagram இல் தொடர்புடைய ரீல்ஸை உங்களுக்குப் பரிந்துரைத்தல்.
- பயனர்கள் தங்கள் பதிவுகள், வீடியோகள் மற்றும் பிற பகிர்வுகளில் எவ்வாறு ஈடுபடுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள நிறுவனங்களுக்கு உதவுதல்.
- நாங்கள் எங்களின் தயாரிப்புகளை மேம்படுத்தி, அவை அனைத்திலும் நீடித்திருக்கும் வகையில் விருப்பத்தேர்வுச் செயல்பாடுகளை வழங்குவோம். அதாவது பின்வருவன போன்ற விஷயங்களை நீங்கள் மேற்கொள்ளலாம்:
- எங்களின் தயாரிப்புகளில் நீங்கள் விரும்பும் விஷயம் பற்றிய கருத்துக்கணிப்புகள் மற்றும் பிற ஆராய்ச்சிகளில் பங்கேற்றல்.
- பல்வேறு தயாரிப்புகளில் உங்கள் கணக்குகள் அனைத்திலும் பயன்படுத்துவதற்கான AR எஃபெக்ட்டுகளை உருவாக்குதல்.
- Facebook மற்றும் Instagram அனைத்திலும் நிதி திரட்டல்களை உருவாக்குதல்.
- உங்களுடைய கணக்குகள் அனைத்திலும் பொருந்துமாறு சில கணக்குத் தகவலையும் அமைப்புகளையும் நாங்கள் சரிசெய்வோம், அவை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் நிர்வகிக்கக்கூடிய வகையில் இருக்கும். அதாவது பின்வருவன போன்ற விஷயங்களை நாங்கள் மேற்கொள்கிறோம்:
- கணக்குகள் மையத்தில் உங்கள் பிற கணக்குகளில் இருப்பதைப் போல் அல்லாமல் வேறு பிறந்தநாளைக் கொண்ட புதிய கணக்கைச் சேர்த்தீர்கள் என்றால், உங்கள் புதிய கணக்கு சேர்க்கப்படுவதற்கு முன்பாக, உங்களின் துல்லியமான பிறந்தநாளைத் தேர்ந்தெடுக்குமாறு நாங்கள் கேட்கக்கூடும்.
- சுயவிவரங்கள் அனைத்திலும் பகிர்தல் போன்ற இணைக்கப்பட்ட அனுபவங்கள் மீதான கட்டுப்பாடுகளை உங்களுக்கு வழங்குவோம். அதாவது பின்வருவன போன்ற விஷயங்களை நீங்கள் மேற்கொள்ளலாம்:
- உங்களது Facebook மற்றும் Instagram கணக்குகள் அனைத்திலும் உங்கள் சொந்தப் பதிவுகளைப் பகிர்தல்.
- நீங்கள் அறிந்திருக்கும் நபர்களை Horizon இல் பின்தொடர்தல்.
அமைப்புகளில் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் ஒரே கணக்குகள் மையத்திலிருந்து கணக்குகளைச் சேர்க்கலாம் அல்லது அகற்றலாம். நீங்கள் அவற்றை அகற்றிய பிறகு 7 நாட்களுக்குள் மேற்கண்ட உபயோகங்களுக்காக இந்தக் கணக்குகள் அனைத்திலும் உங்கள் தகவலை ஒருங்கிணைப்பதை நிறுத்திவிடுவோம். உங்களின் முந்தைய ஒருங்கிணைக்கப்பட்ட தகவல்கள் ஒருங்கிணைக்கப்பட்டவாறே இருக்கும்.
உங்கள் கணக்குகளை ஒரே கணக்குகள் மையத்தில் வைத்திருப்பது, நீங்கள் பிசினஸ்களுடன் உங்கள் தகவலைப் பகிர்ந்து கொள்வதைத் தேர்வுசெய்தாலோ எங்கள் தயாரிப்புகளில் அவற்றிற்கு மெசேஜ் அனுப்பினாலோ உங்கள் தகவல் பயன்படுத்துவதில் பாதிப்பை ஏற்படுத்தாது.
மேலும், ஒரே கணக்குகள் மையத்தில் கணக்குகளை வைத்திருத்தல் என்பது பின்வருவனவற்றில் பாதிப்பை ஏற்படுத்தாது:
- உங்களையும் மற்றவர்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க கணக்குகள் அனைத்திலும் நாங்கள் தகவலைப் பயன்படுத்துகிறோம்.
- மிகவும் துல்லியமாக பயனர்களைக் கணக்கிடுவதற்கும் அவர்கள் எங்கள் தயாரிப்புகளை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதை அளவிடுவதற்கும் கணக்குகள் அனைத்திலும் தகவலைப் பயன்படுத்துகிறோம்.
- எங்களின் தயாரிப்புகள் சரியாகச் செயல்படுகின்றனவா என்பதை உறுதிப்படுத்துவதற்கு, கணக்குகள் அனைத்திலும் தகவலைப் பயன்படுத்துகிறோம். இதனால் அவை சரியாகச் செயல்படவில்லை எனில் அவற்றை நாங்கள் சரிசெய்யலாம்.
- ஒரே தயாரிப்பில் உள்ள உங்கள் கணக்குகள் அனைத்திலும் தகவலை நாங்கள் பயன்படுத்துகிறோம்.
இதைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளுங்கள்: