கணக்குகள் மையத்தில் உங்கள் WhatsApp கணக்கைச் சேர்த்தல்
’கணக்குகள் மையத்தில் WhatsApp’ என்றால் என்ன?
கணக்குகள் மையம் என்பது உங்கள் Facebook, Instagram, WhatsApp மற்றும் Meta கணக்குகள் அனைத்திலும் கணக்கு அமைப்புகள் மற்றும் இணைக்கப்பட்ட அனுபவங்களை ஒரே மையப்புள்ளியில் நிர்வகிக்கக்கூடிய ஓர் இடமாகும். கணக்குகள் மையத்தில் உங்கள் WhatsApp கணக்கைச் சேர்ப்பது முற்றிலும் விருப்பத்தேர்வுக்குரியது. நீங்கள் எப்போது வேண்டுமானாலும் கணக்குகள் மையத்தில் உங்கள் WhatsApp கணக்கைச் சேர்க்கலாம், அங்கிருந்து அகற்றலாம்.
கணக்குகள் மையத்தில் உங்கள் WhatsApp கணக்கைச் சேர்ப்பதன் மூலம், WhatsApp இல் உருவாக்கப்பட்ட உங்கள் ஸ்டேட்டஸை Facebook அல்லது Instagram இல் உள்ள ஸ்டோரிகளில் எளிதாகப் பகிரும் திறன் போன்ற Meta செயலிகள் அனைத்திலும் செயல்படும் அனுபவங்களை நீங்கள் பெறலாம். சுயவிவரத் தகவல்களை மாற்றியமைப்பது போன்ற கணக்கு தொடர்பான சில அமைப்புகளை ஒரே இடத்தில் நிர்வகிக்கவும் முடியும். கணக்குகள் மையத்தில் உங்கள் WhatsApp கணக்கைச் சேர்ப்பது என்பது கீழேயும் WhatsApp தனியுரிமைக் கொள்கையிலும் நாங்கள் விளக்கியுள்ளவாறு இந்தப் பலன்களை வழங்க WhatsApp மற்றும் Meta தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும் என்பதாகும்.
கணக்குகள் மையத்தில் உங்களது WhatsApp கணக்கைச் சேர்ப்பது என்பது உங்கள் WhatsApp தனிப்பட்ட மெசேஜ்களிலோ அழைப்புகளின் தனியுரிமையிலோ பாதிப்பை ஏற்படுத்தாது, இது பேசுவோர் இடையே ரகசியம் காக்கப்பட்டதாகத் தொடர்ந்து நீடிக்கும். வேறு எவரும், WhatsApp, Metaவும் கூட அவற்றை வாசிக்கவோ கேட்கவோ முடியாது. உங்களது தொடர்புப் பட்டியல்களை வேறு எந்த Meta நிறுவனத்துடனும் நாங்கள் பகிர்ந்து கொள்வதுமில்லை.
நிச்சயமாக, உலகம் முழுவதிலும் உள்ள பயனர்களுக்கு விரைவான மற்றும் நம்பகமான சேவைகளை வழங்க, சர்வர்கள் போன்ற Metaவின் உள்கட்டமைப்பை WhatsApp சார்ந்துள்ளது. எனினும், நாங்கள் வழங்கும் சேவையைப் பெறும் பயனர்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுதல், பயனர்களைப் பாதுகாப்பாக வைத்திருத்தல், Meta தயாரிப்புகள் அனைத்திலும் செயல்படும் விருப்பத்தேர்வுக்கான அம்சங்களை வழங்குதலாக இல்லாத வரையில் – விளம்பர நோக்கத்திற்காக உட்பட – WhatsApp தனிப்பட்ட தரவுகளுக்கான அணுகல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது, அந்தத் தரவுகள் மற்ற Meta செயலிகளால் பயன்படுத்தப்படாது.
‘கணக்குகள் மையத்தில் WhatsApp’ என்பது இந்த விருப்பத்தேர்வுக்கான அம்சங்களில் ஒன்றாகும். பிற விருப்பத்தேர்வுக்கான அம்சங்களில் Meta AI உடன் உரையாடலை மேற்கொள்வது அல்லது Metaவின் பிசினஸ் கருவிகளைப் பயன்படுத்தக்கூடிய பிசினஸ்களுக்கு மெசேஜ் அனுப்புவது அடங்கும். செயலியில் விருப்பத்தேர்வுக்கான அம்சங்கள் எப்போதும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன, எனவே உங்களுக்கு ஏற்றதாக இருக்கக்கூடியதை நீங்கள் தேர்வுசெய்யலாம்.
கணக்குகள் மையத்தில் எனது WhatsApp கணக்கைச் சேர்க்கும்போது WhatsApp என்னென்ன தகவல்களைச் சேகரிக்கிறது?
WhatsApp தனது சேவைகளில் சேகரிக்கும் தகவல்கள் குறித்து WhatsApp தனியுரிமைக் கொள்கை விவரிக்கிறது. கணக்குகள் மையத்தில் உங்கள் WhatsApp கணக்கைச் சேர்ப்பதை நீங்கள் தேர்வுசெய்யும்போது, WhatsApp பின்வருவன போன்ற தகவல்களையும் சேகரிக்கிறது:
- கணக்குகள் மையத்தில் நீங்கள் WhatsAppஐப் பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் உருவாக்கப்படும் தனித்துவமான ஐடி போன்ற சாதனம் மற்றும் இணைப்பு குறித்த தகவல்கள்.
- சேவைத் தொடர்பான தகவல்கள், கண்டறிதல் மற்றும் செயல்திறன் குறித்த தகவல்கள் போன்ற ‘கணக்குகள் மையத்தில் WhatsApp’ எவ்வாறு செயல்படுகிறது என்பது பற்றிய பயன்பாடு மற்றும் பதிவுத் தகவல்கள், எகா. பதிவுக் கோப்புகள், டைம்ஸ்டாம்ப்கள், பல தளப் பதிவிடுதல் செயல்பாடு மற்றும் பராமரிப்பு தொடர்பான பதிவுகள்.
கணக்குகள் மையத்தின் மூலம் கிடைக்கும் இணைக்கப்பட்ட அனுபவங்களைப் பயன்படுத்துவதில் உதவ, பிற Meta நிறுவனங்களிடமிருந்தும் WhatsApp தகவல்களைப் பெறுகிறது, அவை:
- தகவல்களை நீங்கள் பல தளப் பதிவிடும் ஒரே கணக்குகள் மையத்தில் உள்ள Facebook அல்லது Instagram கணக்குகளுடன் தொடர்புடைய அடையாளங்காட்டிகள் போன்ற கணக்கு விவரங்கள்.
- உங்கள் Facebook அல்லது Instagram கணக்குகளை உங்கள் WhatsApp கணக்குடன் இணைக்கத் தேவையான சாதனம் மற்றும் இணைப்புத் தகவல்கள்.
- வயது முரண்பாட்டைச் சரிபார்த்து ஒப்பிடுதல் மற்றும் Meta நிறுவனத் தயாரிப்புகளுக்கான தகுதிநிலையைத் தீர்மானித்தல் போன்ற விஷயங்களைச் செய்ய எங்களுக்கு உதவும் Meta கணக்குகளில் (எகா. Facebook) குறிப்பிடப்பட்டுள்ள உங்கள் வயது குறித்த தகவல்கள்.
கணக்குகள் மையத்தில் எனது WhatsApp கணக்கை நான் சேர்க்கும்போது Meta என்னைப் பற்றி என்ன தகவல்களைப் பெறும்?
கணக்குகள் மையத்தில் உங்கள் WhatsApp கணக்கைச் சேர்ப்பதை நீங்கள் தேர்வுசெய்யும்போது, பிற Meta நிறுவனங்கள் பின்வருவன போன்ற தகவல்களைப் பெறுகின்றன:
- உங்கள் ஃபோன் எண் மற்றும் உங்கள் WhatsApp சுயவிவரப் படம் போன்ற கணக்கு விவரங்கள் (எடுத்துக்காட்டாக, உங்கள் கணக்குகள் மைய அமைப்புகளில் அதனைக் காண்பிக்க).
- வயது முரண்பாட்டைச் சரிபார்த்து ஒப்பிடுதல் மற்றும் Meta நிறுவனத் தயாரிப்புகளுக்கான தகுதிநிலையைத் தீர்மானித்தல் போன்ற விஷயங்களைச் செய்ய Metaவுக்கு உதவும் உங்கள் வயது குறித்த தகவல்கள் (வழங்கப்பட்டால்).
- உங்கள் ஸ்டேட்டஸ் புதுப்பிப்புகளை Facebook அல்லது Instagram ஸ்டோரிகளில் பகிர்ந்துள்ளீர்கள் என்றால், உங்கள் WhatsApp ஸ்டேட்டஸ் போன்ற பயனர் பகிர்வு.
- உங்கள் செயலியின் பதிப்பு அல்லது WhatsApp இல் நீங்கள் அமைத்த சாதன மொழி போன்ற சாதனம் மற்றும் இணைப்பு தொடர்பான தகவல்கள்.
- கணக்குகள் மையத்தில் உங்கள் WhatsApp கணக்கைச் சேர்த்துள்ளீர்களா, இல்லையா, அதனை எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள், அல்லது உங்கள் WhatsApp ஸ்டேட்டஸை Facebook அல்லது Instagram ஸ்டோரிகளில் எத்தனை முறை பகிர்ந்துள்ளீர்கள் என்பது போன்ற நாங்கள் வழங்கும் சேவைகளை நீங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பது பற்றிய தகவல்களை உள்ளடக்கிய பயன்பாடு மற்றும் பதிவுத் தகவல்கள்.
- பொருந்தினால், உங்கள் சேனல்களைப் பயன்படுத்துவது தொடர்பான தகவல்கள் (சேனல்களுக்காக நாங்கள் சேகரிக்கும் தகவல்கள் பற்றி மேலும் அறிக).
கணக்குகள் மையத்தில் எனது WhatsApp கணக்கைச் சேர்த்தால், WhatsApp எனது தகவலை என்ன நோக்கங்களுக்காகப் பயன்படுத்தும்?
கணக்குகள் மையத்தில் உங்கள் WhatsApp கணக்கைச் சேர்க்கும்போது, WhatsApp உங்கள் தகவலைப் பின்வருவன போன்ற நோக்கங்களுக்காகப் பயன்படுத்துகிறது:
- கணக்குகள் மையத்தில் WhatsAppக்கான சேவைகளை உங்களுக்கு வழங்குதல் மற்றும் WhatsApp இல் அம்சங்கள் மற்றும் அனுபவங்களின் செயல்பாட்டை எளிதாக்குதல், இதில் பின்வரும் விஷயங்கள் அடங்கும்:
- உங்கள் கணக்குத் தகுதிநிலையைச் சரிபார்த்தல் மற்றும் கணக்குகள் மையத்தில் உங்கள் WhatsApp கணக்கைச் சேர்த்தல்.
- கணக்குகள் அனைத்திலும் உங்கள் கணக்கு விவரங்களையும் அமைப்புகளையும் பொருத்துவதற்கு அவற்றைச் சரிசெய்தல்.
- உங்கள் சாதனம் ஏற்கெனவே ஒரே கணக்குகள் மையத்தில் உள்ள மற்றொரு Meta கணக்கில் உள்நுழைந்திருந்தால், WhatsAppஐ எளிதாக அணுக உதவ ஒற்றை உள்நுழைவைச் செயல்படுத்துதல்.
- உங்கள் WhatsApp ஸ்டேட்டஸை Facebook அல்லது Instagram ஸ்டோரிகளில் பகிர்வது போன்ற இணைக்கப்பட்ட அனுபவங்கள் மீதான கட்டுப்பாடுகளை வழங்குதல்.
- கணக்குகள் மையத்தில் WhatsApp போன்ற WhatsApp சேவைகள் மற்றும் தயாரிப்புகளை மேம்படுத்துதல், இதில் பின்வருவன போன்ற விஷயங்கள் அடங்கும்:
- தயாரிப்பு தொடர்பான பிரச்சினைகளைப் பிழையறிதல், கண்டறிதல், பகுப்பாய்வு செய்தல் மற்றும் பிழைதிருத்துதல்.
- சேவைச் செயல்திறன், நம்பகத்தன்மை மற்றும் திறனைக் கண்காணித்தல்.
- தற்போது உள்ளவற்றை மாற்றியமைத்தல் மற்றும் புதிய அம்சங்களை உருவாக்குதல் மற்றும் கணக்குகள் மையத்தில் புதிய அம்சங்களில் ஏற்படும் தாக்கத்தை மதிப்பிடுவதற்குப் பரிசோதனைகளை மேற்கொள்ளுதல்.
- கணக்குகள் மையத்தில் உள்ள WhatsApp எவ்வளவு சிறப்பாகவும், கால இடைவெளியில் பயன்படுத்தப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ளவும், கணக்குகள் மையத்தில் அம்சங்களை வருங்காலத்தில் ஏற்பதை முன்னறிவிக்கவும் அளவீடுகளை உருவாக்குதல் மற்றும் மதிப்பிடுதல்.
- பின்வருவன போன்ற விஷயங்களை மேற்கொள்ள ஒரே கணக்குகள் மையத்தில் உள்ள கணக்குகள் அனைத்திலும் தகவல்களைப் பயன்படுத்த பிற Meta நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுதல்:
- கணக்குகள் மையத்தில் பிற Meta நிறுவனத் தயாரிப்புகள் கணக்குகளுடன் உங்கள் WhatsApp கணக்கைப் இணைத்தல்.
- நீங்கள் தேர்வுசெய்துள்ள இணைக்கப்பட்ட அனுபவங்களை உங்களுக்கு வழங்குதல், கணக்குகள் அனைத்திலும் உங்கள் அனுபவங்களை மேம்படுத்துதல்.
கணக்குகள் மையத்தில் எனது WhatsApp கணக்கைச் சேர்த்தால், Meta எனது தகவலை எவ்வாறு பயன்படுத்தும்?
கணக்குகள் மையத்தில் உங்கள் WhatsApp கணக்கைச் சேர்ப்பதை நீங்கள் தேர்வுசெய்தால், Meta தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி உங்கள் தகவல்களை Meta பயன்படுத்தும். அதாவது, உங்களுக்கு விளம்பரங்களைக் காண்பித்தல், அவற்றின் செயல்திறனை அளவிடுதல் உட்பட அதன் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குதல், மிகவும் நபருக்கேற்றபடியாக்குதல் மற்றும் மேம்படுத்துதல் மற்றும் Meta நிறுவனத் தயாரிப்புகள் அனைத்திலும் மிகவும் நபருக்கேற்றபடியாக்கப்பட்ட அம்சங்கள், பகிர்வு மற்றும் பரிந்துரைகளை வழங்குதல் அத்துடன் பாதுகாப்பு, பாதுகாவல் மற்றும் ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட விஷயங்களை மேற்கொள்ளுதல் இதில் அடங்கும். Metaவின் சொந்த விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கையே உங்கள் Meta சேவைகள் மற்றும் தயாரிப்புகளின் உபயோகத்தை நிர்வகிக்கும்.
நிச்சயமாக, உலகம் முழுவதிலும் உள்ள பயனர்களுக்கு விரைவான மற்றும் நம்பகமான சேவைகளை வழங்க, சர்வர்கள் போன்ற Metaவின் உள்கட்டமைப்பை WhatsApp சார்ந்துள்ளது. எனினும், நாங்கள் வழங்கும் சேவையைப் பெறும் பயனர்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுதல், பயனர்களைப் பாதுகாப்பாக வைத்திருத்தல், Meta தயாரிப்புகள் அனைத்திலும் செயல்படும் விருப்பத்தேர்வுக்கான அம்சங்களை வழங்குதலாக இல்லாத வரையில் – விளம்பர நோக்கத்திற்காக உட்பட – WhatsApp தனிப்பட்ட தரவுகளுக்கான அணுகல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது, அந்தத் தரவுகள் மற்ற Meta செயலிகளால் பயன்படுத்தப்படாது.
‘கணக்குகள் மையத்தில் WhatsApp’ என்பது இந்த விருப்பத்தேர்வுக்கான அம்சங்களில் ஒன்றாகும். பிற விருப்பத்தேர்வுக்கான அம்சங்களில் Meta AI உடன் உரையாடலை மேற்கொள்வது அல்லது Metaவின் பிசினஸ் கருவிகளைப் பயன்படுத்தக்கூடிய பிசினஸ்களுக்கு மெசேஜ் அனுப்புவது அடங்கும். செயலியில் விருப்பத்தேர்வுக்கான அம்சங்கள் எப்போதும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன, எனவே உங்களுக்கு ஏற்றதாக இருக்கக்கூடியதை நீங்கள் தேர்வுசெய்யலாம்.
கணக்குகள் மையத்தில் WhatsAppஐச் சேர்ப்பது, நான் ஒரு பிசினஸுக்கு மெசேஜ் அனுப்பும்போது அல்லது எனது தகவலை அவர்களுடன் பகிர்ந்துகொள்ளும்போது Meta எனது தகவல்களைப் பயன்படுத்துவதில் பாதிப்பை ஏற்படுத்துமா?
உங்கள் கணக்குகளை ஒரே கணக்குகள் மையத்தில் வைத்திருப்பது, நீங்கள் பிசினஸ்களுடன் உங்கள் தகவலைப் பகிர்ந்து கொள்வதைத் தேர்வுசெய்தாலோ எங்கள் தயாரிப்புகளில் அவற்றிற்கு மெசேஜ் அனுப்பினாலோ உங்கள் தகவல் பயன்படுத்துவதில் பாதிப்பை ஏற்படுத்தாது.
ஒரே கணக்குகள் மையத்தில் உள்ள உங்கள் கணக்குகள் அனைத்திலும் Meta உங்கள் தகவல்களை எவ்வாறு பயன்படுத்துகிறது என்பது பற்றி மேலும் அறிக.
என்னுடைய அமைப்புகளில் எவை மாறும்?
கணக்குகள் மையத்தில் உங்கள் WhatsApp கணக்கைச் சேர்ப்பது, உங்கள் WhatsApp கணக்குகளுக்கும், ஒரே கணக்குகள் மையத்தில் நீங்கள் வைத்திருக்கும் வேறு எந்தக் கணக்குகளுக்கும் ஒரே இடத்தில் சில அமைப்புகளை நிர்வகிக்க அனுமதிக்கும். கணக்குகள் அனைத்திலும் உங்கள் சுயவிவரத் தகவல்களை மாற்றியமைத்தல் மற்றும் ஸ்டேட்டஸை உங்கள் செயலிகள் அனைத்திலும் எப்போதும் பல தளப் பதிவிட வேண்டுமா என்பது போன்ற விஷயங்கள் இதில் அடங்கும். கணக்குகள் மையம் மூலம் கட்டுப்படுத்தப்படும் அமைப்புகளின் முழுப் பட்டியலுக்கு, இங்கே மேலும் படியுங்கள்.
கணக்குகள் மையத்தில் எனது WhatsApp கணக்கைச் சேர்க்க விரும்பவில்லை என்றால் என்ன செய்வது?
நீங்கள் செய்தாக வேண்டும் என்பதில்லை. கணக்குகள் மையத்தில் உங்கள் WhatsApp கணக்கைச் சேர்ப்பது முற்றிலும் விருப்பத்தேர்வுக்குரியது. உங்கள் Facebook அல்லது Instagram கணக்குகள் இருக்கும் ஒரே கணக்குகள் மையத்தில் உங்கள் WhatsApp கணக்கையும் சேர்க்க வேண்டாம் என்று நீங்கள் தேர்வுசெய்தாலும், நீங்கள் எப்போதும் பயன்படுத்துவ்தைப் போலவே இப்போதும் WhatsAppஐப் பயன்படுத்தலாம்.
கணக்குகள் மையத்தில் எனது WhatsApp கணக்கைச் சேர்த்துவிட்டு, பின்னர் எனது எண்ணத்தை மாற்றிக்கொண்டால் என்னவாகும்?
கணக்குகள் மையத்தில் உங்கள் WhatsApp கணக்கைச் சேர்த்தால், வெவ்வேறு Meta நிறுவனத் தயாரிப்புகளில் உள்ள உங்கள் தகவல்களைக் கணக்குகள் மையத்தில் உள்ள கணக்குகள் அனைத்திலும் ஒருங்கிணைத்துப் பயன்படுத்த எங்களை அனுமதிக்கிறீர்கள். கணக்குகள் மையத்திலிருந்து உங்கள் WhatsApp கணக்கை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் அகற்றிக் கொள்ளலாம்.
கணக்குகள் மையத்திலிருந்து உங்கள் WhatsApp கணக்கை அகற்றினால், 7 நாட்களுக்குள் உங்கள் WhatsApp கணக்கிற்கும் உங்கள் கணக்குகள் மையத்தில் இன்னும் உள்ள பிற கணக்குகளுக்கும் இடையே உங்கள் தகவலை ஒருங்கிணைப்பதை நாங்கள் நிறுத்திவிடுவோம். உங்கள் WhatsApp கணக்கை நீங்கள் அகற்றினால், உங்களின் முந்தைய ஒருங்கிணைக்கப்பட்ட தகவல் ஒருங்கிணைக்கப்பட்டவாறே இருக்கும்.
2016 இல் எனது WhatsApp கணக்கு விவரங்களை Metaவுடன் பகிர்ந்து கொள்வதிலிருந்து நான் விலகிவிட்டேன். கணக்குகள் மையத்தில் எனது WhatsApp கணக்கைச் சேர்ப்பது எவ்வாறான பாதிப்பை எனக்கு ஏற்படுத்தும்?
Meta விளம்பரங்களையும் தயாரிப்பு அனுபவங்களையும் மேம்படுத்த Metaவுடன் உங்கள் WhatsApp கணக்கு விவரங்களைப் பகிர்வதிலிருந்து 2016 இல் நீங்கள் விலகியிருந்தீர்கள் எனில், கணக்குகள் மையத்தில் உங்கள் WhatsApp கணக்கைச் சேர்ப்பதன் மூலம், இந்தப் பகிர்தலையும், கூடவே மேலே விவரிக்கப்பட்டுள்ளபடி கணக்குகள் மையத்துடன் தொடர்புடைய அனைத்துப் பகிர்தல்களையும் நீங்கள் தேர்வுசெய்கிறீர்கள் என்று பொருள்படும்.