Meta AI மற்றும் வைபுகளில் உங்களின் அல்லது பிறரின் படங்களையும் வீடியோக்களையும் உருவாக்கும் விதம்
Meta AI மற்றும் வைபுகள் செயலிகளில் உங்களது அல்லது மற்றவர்களின் படங்கள் அல்லது வீடியோக்களை நீங்கள் உருவாக்கலாம்.
தொடங்குவதற்கு:
- உங்களின் AI படங்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்க, உங்களைப் படம் எடுத்து, பதிவேற்றுங்கள். படங்கள் மற்றும் வீடியோக்களில் உங்களைப் பிறர் சேர்ப்பதையும் நீங்கள் அனுமதிக்கலாம்.
- படங்களில் அல்லது வீடியோக்களில் உங்கள் நண்பர்களைச் சேர்க்க அனுமதி கோருங்கள். பொதுவான நண்பர்களின் அமைப்புகளைப் பொறுத்து, அவர்களது படங்களையும் வீடியோக்களையும் உங்களால் உருவாக்க முடியும்.
உங்களின் AI படங்கள் மற்றும் வீடியோக்களை நீங்களே உருவாக்கத் தொடங்கும் விதம்
உங்களின் படங்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்க, Meta AI அல்லது வைபுகள் செயலியில் உங்கள் படங்களை நீங்கள் சேர்க்க வேண்டியிருக்கும். உங்களின் படங்கள் அல்லது வீடியோக்களை மற்றவர்கள் உருவாக்க அனுமதிப்பதையும் நீங்கள் தேர்வுசெய்யலாம்.
தொடங்குவதற்கு:
- Meta AI செயலியில்,
மெனு என்பதைத் தட்டுங்கள்.
- கீழே உள்ள உங்கள் சுயவிவரப் படத்தைத் தட்டுங்கள்.
- உங்களைப் போன்ற முகச்சாயல் என்பதைத் தட்டி, பின்னர், தொடங்குக என்பதைத் தட்டுங்கள்.
- உங்களிடம் அடுத்து கேட்கப்படுபவை:
- அனுமதிகளை அனுமதித்தல்
- செயலியைப் பயன்படுத்தி உங்களின் படத்தை எடுத்தல்
- நீங்கள் விருப்பத்தேர்வாகச் செய்யக்கூடியவை:
- உங்களின் 3 கூடுதல் படங்களைப் பதிவேற்றுங்கள். இது உங்கள் AI படங்களை மேம்படுத்த எங்களுக்கு உதவுகிறது.
- வீடியோக்களில் சேர்க்கும் வகையில் உங்கள் குரலைப் பதிவுசெய்யுங்கள்.
- உங்களைப் போன்ற முகச்சாயலில் கூடுதல் படங்களையோ உங்கள் குரலையோ சேர்க்க விரும்பவில்லை என்றால், நீங்கள் தவிர்த்திடுக என்பதைத் தட்டலாம்.
- உங்கள் படத்தை யார் பயன்படுத்தலாம் என்பதைத் தேர்வுசெய்ய, தட்டுங்கள்:
- நான் மட்டும்: உங்களின் படங்கள் மற்றும் வீடியோக்களை நீங்கள் மட்டுமே உருவாக்க முடியும்.
- நான் அனுமதிக்கும் பின்தொடர்பவர்கள்: உங்களை மீடியாவில் சேர்க்க நீங்கள் அனுமதிக்க விரும்பும் குறிப்பிட்ட பின்தொடர்பவர்களைத் தேர்வுசெய்யுங்கள். நீங்களும் அவர்களும் ஏற்கெனவே ஒருவரை ஒருவர் பின்தொடரும் நிலையில் இருக்க வேண்டும்.
- நானும் பின்தொடரும் பின்தொடர்பவர்கள்: நீங்கள் ஒருவரைப் பின்தொடர்ந்து, அவர்களும் உங்களைப் பின்தொடர்ந்தால், அவர்கள் உங்களைப் படங்களிலும் வீடியோக்களிலும் சேர்க்கலாம்.
- அனைவரும்: Meta AI அல்லது வைபுகள் செயலியில் உள்ள எவரும் உங்கள் படங்களையும் வீடியோக்களையும் உருவாக்கலாம்.
- முடிந்தது என்பதைத் தட்டுங்கள்.
குறிப்பு: உங்கள் வயது அல்லது நாட்டைப் பொறுத்து அனைத்து விருப்பத்தேர்வுகளையும் நீங்கள் பார்க்க முடியாமல் போகலாம்.
நீங்கள் சேர்க்கப்பட்டுள்ள மீடியாக்களைப் பார்வையிடும் மற்றும் நிர்வகிக்கும் விதம் குறித்து அறிக.
Meta AI மற்றும் வைபுகளில் உங்கள் படத்தையும் குரலையும் திருத்தும் அல்லது நீக்கும் விதம்
- Meta AI செயலியில்,
மெனு என்பதைத் தட்டுங்கள்.
- கீழ் வலதுபுறத்தில் உள்ள சுயவிவரப் படத்தைத் தட்டுங்கள்.
- உங்களைப் போன்ற முகச்சாயல் என்பதைத் தட்டுங்கள். இங்கிருந்தபடி, நீங்கள் செய்யக்கூடியவை:
- உங்கள் படத்தை மீண்டும் எடுக்கலாம்:படத்தை மீண்டும் எடுத்திடுக > படத்தை எடுத்திடுக என்பதைத் தட்டுங்கள்.
- உங்கள் குறிப்புப் படங்களை மாற்றலாம்:படங்களைப் பதிவேற்றுக > படங்களை மாற்றீடு செய்க என்பதைத் தட்டுங்கள்.
- உங்கள் குரலை மீண்டும் பதிவுசெய்யலாம்:குரலை மீண்டும் பதிவுசெய்க > குரலைப் பதிவுசெய்க என்பதைத் தட்டுங்கள்.
- உங்களைப் போன்ற முகச்சாயலை நீக்குங்கள்: கீழ் நோக்கி நகர்த்தி நீக்குக என்பதைத் தட்டுங்கள். இது ஆன்போர்டிங்கின்போது நீங்கள் எடுத்த படத்தையும் குரல் பதிவையும் நீக்குகிறது.
குறிப்பு: வைபுகள் செயலியில் உங்களைப் போன்ற முகச்சாயலில் நீங்கள் செய்த எந்த மாற்றங்களும் Meta AI செயலியிலும் பயன்படுத்தப்படும்.
உங்களைப் போன்ற முகச்சாயலை நீங்கள் நீக்க விரும்பினாலும், நீங்கள் உள்ள வைபுகள் இன்னும் தெரியும் நிலையில் இருக்கும். இவை “நான் சேர்க்கப்பட்டுள்ள மீடியா” என்ற பகுதியில் இருந்து நீக்க முடியும். நீங்கள் சேர்க்கப்பட்டுள்ள மீடியாவை நீக்கும் விதம் குறித்து மேலும் அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
AI உருவாக்கிய படங்கள் அல்லது வீடியோக்களில் பயனர்களைச் சேர்க்க கோரிக்கை விடுக்கும் விதம்
பயனர்கள் தங்களைப் படங்களிலும் வீடியோக்களிலும் யார் சேர்க்கலாம் என்பதைத் தேர்வுசெய்யலாம், அது தான் மட்டும், பொதுவான பின்தொடர்பவர்கள், Meta AI அல்லது வைபுகள் செயலிகளைப் பயன்படுத்தும் எவரும் என்பதாக இருக்கலாம். ஒருவரைப் படங்களிலும் வீடியோக்களிலும் சேர்க்க, நீங்களும் அவருக்குக் கோரிக்கை விடுக்க முடியும்.
Meta AI மற்றும் வைபுகளில் பயனர்கள் உங்களை மீடியாவில் சேர்க்க அனுமதிக்கும் விதம்
ஒருவர் உங்களின் படங்கள் அல்லது வீடியோக்களை உருவாக்க வேண்டுமானால், அவர்களுக்கு உங்கள் அனுமதி அவசியமாகும். உங்கள் அனுமதி அமைப்புகளை மாற்ற:

- உங்களைப் போன்ற முகச்சாயல் என்பதைத் தட்டி, பின்னர் உங்களை மீடியாவில் யார் சேர்க்கலாம் என்பதைத் தேர்ந்தெடுங்கள்:
- நான் மட்டும்: உங்களின் படங்கள் மற்றும் வீடியோக்களை நீங்கள் மட்டுமே உருவாக்க முடியும்.
- நான் அனுமதிக்கும் பின்தொடர்பவர்கள்: உங்களை மீடியாவில் சேர்க்க நீங்கள் அனுமதிக்க விரும்பும் குறிப்பிட்ட பின்தொடர்பவர்களைத் தேர்வுசெய்யுங்கள். நீங்களும் அவர்களும் ஏற்கெனவே ஒருவரை ஒருவர் பின்தொடரும் நிலையில் இருக்க வேண்டும்.
- நான் பின்தொடரும் பின்தொடர்பவர்கள்: நீங்கள் ஒருவரைப் பின்தொடர்ந்து, அவர்களும் உங்களைப் பின்தொடர்ந்தால், அவர்கள் உங்களை மீடியாவில் சேர்க்கலாம்.
- அனைவரும்: Meta AI அல்லது வைபுகள் செயலியில் உள்ள எவரும் உங்கள் படங்களையும் வீடியோக்களையும் உருவாக்கலாம்.
குறிப்பு: உங்கள் வயது அல்லது நாட்டைப் பொறுத்து அனைத்து விருப்பத்தேர்வுகளையும் நீங்கள் பார்க்க முடியாமல் போகலாம்.
ஒருவர் உங்களைப் போன்ற முகச்சாயலைப் பயன்படுத்தினால், உங்களுக்குத் தெரிவிக்கப்படும். உங்கள் அறிவிப்புகளை Meta AI மற்றும் வைபுகளில் மாற்றும் விதம் குறித்து அறிக. ஒருவர், நீங்கள் சேர்க்கப்பட்டுள்ள படம் அல்லது வீடியோ உருவாக்கினால், அதை நீக்குவதை நீங்கள் தேர்வுசெய்யலாம். நீங்கள் சேர்க்கப்பட்டுள்ள மீடியாவை நீக்கும் விதம் குறித்து மேலும் அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
குறிப்புகள்:
- உங்கள் அனுமதிகளை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் மாற்றலாம்.
- உங்கள் அனுமதிகள் Meta AI மற்றும் வைபுகள் செயலிகள் என இரண்டிற்கும் பொருந்தும்.
- நீங்கள் ஒருவரைப் பின்தொடர்வதை நிறுத்துவதை அல்லது அவர்களைத் தடுப்பதைத் தேர்ந்தெடுத்தால், அவர்கள் இனி உங்களைச் சேர்த்து புதிய படங்கள் அல்லது வீடியோக்களை உருவாக்க முடியாது. அவர்கள் உருவாக்கிய முந்தைய மீடியாக்கள் அனைத்தும் அப்படியே இருக்கும்; இருப்பினும், நீங்கள் அதனை நீக்கலாம்.
Meta AI மற்றும் வைபுகளில் உள்ள மீடியாக்களில் தங்களைச் சேர்க்குமாறு பிறரிடம் கேட்கும் விதம்
ஒரு வைபை ரீமிக்ஸ் செய்யும்போது தன்னை வைபில் சேர்க்குமாறு அவர்களைக் கேட்க:
- சேர்த்திடுக என்பதைத் தட்டுங்கள்.
- கோரிக்கை என்பதைத் தட்டுங்கள். Meta AI, வைபுகள் செயலிகள் மற்றும் Instagram இல் உங்கள் நண்பர்களை நீங்கள் காண்பீர்கள்.
- அவர்களின் பெயருக்கு அடுத்துள்ள கோரிக்கை என்பதைத் தட்டுங்கள்.
நீங்கள் ஒருவருக்கு ஒரு கோரிக்கையை அனுப்பும்போது:
- Meta AI மற்றும் வைபுகளில் நீங்கள் உருவாக்கும் படங்கள் மற்றும் வீடியோக்களில் நீங்கள் அவர்களைச் சேர்க்க விரும்புவது அவர்களுக்குத் தெரிவிக்கப்படும்.
- அவர்கள் Meta AI அல்லது வைபுகள் செயலியை இன்னும் பதிவிறக்கம் செய்யவில்லை என்றால், அதனைப் பதிவிறக்கம் செய்ய அவர்கள் அழைக்கப்படுவார்கள்.
- அவர்கள் இன்னும் ஒரு முகச்சாயலை உருவாக்கவில்லை என்றால், அதனை உருவாக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுவார்கள்.
அவர்கள் உங்கள் கோரிக்கையை ஏற்றுக் கொண்டால், உங்களுக்குத் தெரிவிக்கப்படும், பின்னர் நீங்கள் அவர்களின் படங்களையும் வீடியோக்களையும் உருவாக்கத் தொடங்கலாம். உங்கள் அறிவிப்புகளை Meta AI மற்றும் வைபுகளில் மாற்றும் விதம் குறித்து அறிக.
பயனர்களைச் சேர்த்து படங்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்கும் விதம்
ஏற்கெனவே உள்ள வைபில் நீங்கள் உங்களை அல்லது பிறரைச் சேர்க்க ரீமிக்ஸ் செய்யலாம் அல்லது உங்களின் அல்லது பிறரின் புதிய படங்கள் அல்லது வீடியோக்களை உருவாக்கலாம்.
உங்களைப் பற்றிய படங்களையும் வீடியோக்களையும் உருவாக்குதல்
ஏற்கெனவே உள்ள ஒரு வைபை ரீமிக்ஸ் செய்து, அதில் உங்களையும் சேர்க்க:
- பயனர்களைக் கொண்ட ஒரு வைபைத் தேர்வுசெய்யுங்கள்.
- பின் வருவதைத் தட்டுங்கள்:
நீங்கள் ரீமிக்ஸ் செய்ய விரும்பும் பதிவில் உள்ள ரீமிக்ஸ்
- சேர்த்திடுக என்பதைத் தட்டுங்கள்.
- உங்களின் படத்தைத் தட்டுங்கள்.
வைபுகளை ரீமிக்ஸ் செய்தல் பற்றி மேலும் அறிக.
புதிய படம் அல்லது வீடியோவில் உங்களைச் சேர்க்க:
- Meta AI செயலியைத் திறந்திடுங்கள்.
- பின் வருவதைத் தட்டுங்கள்:
மேல் வலதுபுறத்தில் உருவாக்குக.
- படம் அல்லது வீடியோவை விவரித்திடுக…பெட்டியில் உங்கள் கேட்டலை நிரப்பி, உங்கள் விளக்கத்தில் “நான்” அல்லது “என்னை” என்ற வார்த்தைகளைச் சேர்த்திடுங்கள். எடுத்துக்காட்டாக, "நான் விண்வெளி வீரராக உள்ள எனது வீடியோவை உருவாக்குக."
- பின் வருவதைத் தட்டுங்கள்:
அனுப்புக.
Meta AI மற்றும் வைபுகளைப் பயன்படுத்தி படங்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்குவது பற்றி மேலும் அறிக.
வேறு ஒருவரின் படங்களையும் வீடியோக்களையும் உருவாக்குதல்
ஏற்கெனவே உள்ள ஒரு வைபை ரீமிக்ஸ் செய்ய:

- நீங்கள் சேர்க்க விரும்பும் நபரின் பெயரைத் தட்டுங்கள். ஒரே நேரத்தில் ஒருவரை மட்டுமே நீங்கள் சேர்க்கலாம் (உங்களையும் சேர்த்து).

புதிய படம் அல்லது வீடியோவில் பயனர்களைச் சேர்க்க:
- Meta AI செயலியைத் திறந்திடுங்கள்.
- பின் வருவதைத் தட்டுங்கள்:
மேல் வலதுபுறத்தில் உருவாக்குக.
- படம் அல்லது வீடியோவை விவரித்திடுக…பெட்டியில் உங்கள் கேட்டலை நிரப்பி, "@" என்பதைச் சேர்த்து, பின்னர் படம் அல்லது வீடியோவில் நபரின் பயனர்பெயரைச் சேர்த்திடுங்கள். ஒரே நேரத்தில் நீங்கள் இரண்டு பேர் வரை சேர்க்கலாம் (உங்களையும் சேர்த்து).
- பின் வருவதைத் தட்டுங்கள்:
அனுப்புக.
Meta AI மற்றும் வைபுகளைப் பயன்படுத்தி படங்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்குவது பற்றி மேலும் அறிக.
நீங்கள், ஒருவர் சேர்க்கப்பட்டுள்ள வைபு ஒன்றைப் பதிவிட்டால், அவர்களுக்குத் தெரிவிக்கப்படும்.
நீங்கள் உருவாக்கிய வைபுகள் மற்றும் வரைவுகள் (நீங்கள் இன்னும் பதிவிடாத வரைவுகள் உட்பட) அதில் இடம்பெறும் நபரால் பார்க்கப்படவும், நீக்கப்படவும் செய்யலாம்:
- நீங்கள் வைபில் இடம்பெறச் செய்யும் நபர், அவர் சேர்க்கப்பட்டுள்ள உங்கள் பொது வைபுகள் அல்லது வரைவுகளை நீக்குவதைத் தேர்வுசெய்யலாம். பொது வைபுகளைப் பொறுத்த வரையில், ஏதேனும் ஒரு விஷயம் நீக்கப்படும்போது உங்களுக்கு ஒரு அறிவிப்பு வரும்.
- வரைவுகள் நீக்கப்படும்போது உங்களுக்கு அறிவிப்பு வராது. ஒரு வரைவு விடுபட்டிருப்பதை நீங்கள் கவனித்தால், நீங்கள் இடம்பெறச் செய்த நபரால் அது நீக்கப்பட்டிருக்கலாம்.
நீங்கள் சேர்க்கப்பட்டுள்ள மற்றவர்களின் வைபுகளை நீக்கும் விதம்
- Meta AI செயலியில்,
மெனு என்பதைத் தட்டுங்கள்.
- கீழே உள்ள உங்கள் சுயவிவரப் படத்தைத் தட்டுங்கள்.
- உங்களைப் போன்ற முகச்சாயல் என்பதைத் தட்டுங்கள், பின்னர் நான் சேர்க்கப்பட்டுள்ள மீடியா என்பதைத் தட்டுங்கள்.
- வைபுகள்:
விருப்பத்தேர்வு என்பதைத் தட்டி, பின்னர் நீக்குக என்பதைத் தட்டுங்கள்.
- வரைவுகள்: வரைவு என்பதைத் தட்டி, பின்னர் நீக்குக என்பதைத் தட்டுங்கள்.
Meta AI அல்லது வைபுகள் செயலியில், நீங்கள் சேர்க்கப்பட்டுள்ள ஒரு வைபை உருவாக்கிப் பதிவிட ஒருவர் 'சேர்த்திடுக' அம்சத்தைப் பயன்படுத்தும்போது, உங்களுக்கு தெரிவிக்கப்படும். நீங்கள் சேர்க்கப்பட்டுள்ள, பொதுவான வைபுகள் அல்லது வரைவுகளை நீக்குவதை எப்போது வேண்டுமானாலும் நீங்கள் தேர்வுசெய்யலாம். நீங்கள் ஒரு பொது வைபை நீக்கும்போது, அதனை உருவாக்கியவருக்குத் தெரிவிக்கப்படும். நீங்கள் ஒரு வரைவை நீக்கும்போது, அதனை உருவாக்கியவருக்குத் தெரிவிக்கப்படாது.
குறிப்பு:
- பிற அரட்டைகளைப் போலவே, AI உடனான அரட்டைகளும் எங்களது <சமூகத் தரநிலைகள் மற்றும் சேவை விதிமுறைகள் ஆகியவற்றுக்கு உட்பட்டவையாகும்.
- ஒரு AI இன் பதில் துல்லியமற்றதாகவோ தகாததாகவோ இருக்கலாம் எனவே, முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு இதனைப் பயன்படுத்தக்கூடாது.
- Metaவில் AIஐ மேம்படுத்த, AIகளுடனான உங்கள் கலந்துரையாடல்களை Meta பயன்படுத்துகிறது. AIகள் உங்கள் கேள்விக்குப் பதிலளிக்க முடியவில்லை எனில், நீங்கள் AIக்கு அனுப்பும் மெசேஜ்களையும், நீங்கள் உள்ள பிராந்தியம் போன்ற பொதுத் தகவல்களைத் தேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டாளர்களுடன் Meta பகிர்கிறது, இதனால் நீங்கள் சிறந்த விளைவுகளைப் பெற முடியும். மேலும் அறிய எங்களது Meta AI இன் சேவை விதிமுறைகள் என்பதற்குச் செல்லுங்கள்.
- Meta AI, உங்களுக்கு மிகவும் பொருத்தமான பதில்களை வழங்க உங்கள் இருப்பிடத் தகவல்களைப் பயன்படுத்துகிறது. உங்கள் இருப்பிடத் தகவல்கள், உங்கள் சாதனத்தில் நீங்கள் தேர்ந்தெடுத்த அமைப்புகள் அல்லது எங்கள் தயாரிப்புகள் முழுவதும் உங்கள் செயல்பாடுகள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டவை. தனியுரிமை மையத்தில் உங்கள் இருப்பிடத்தை எவ்வாறு நிர்வகிப்பது என்பது பற்றி மேலும் அறிக.
- உங்கள் வயது மற்றும் பாலினம் போன்ற உங்கள் சுயவிவரத்தில் உள்ள பிற தகவல்கள் மற்றும் விளம்பரங்கள் உட்பட நீங்கள் பார்க்கும் அல்லது செயலை மேற்கொள்ளும் உள்ளடக்கத்தின் வகைகள் மற்றும் அதனுடன் நீங்கள் எவ்வாறு செயலை மேற்கொள்கிறீர்கள் போன்ற எங்களது தயாரிப்புகளில் உங்கள் செயல்பாட்டின் அடிப்படையிலான ஆர்வங்கள் ஆகியவை AI உடனான உங்கள் கலந்துரையாடல்களை நபருக்கேற்றபடியாக்க உதவும் வகையில் பயன்படுத்தப்படும். இந்தத் தகவல்களை Meta பயன்படுத்தும் விதம் பற்றி தனியுரிமை மையம் என்பதில் மேலும் அறியுங்கள். அதே கணக்குகள் மையத்தில் உங்கள் கணக்குகள் அனைத்திலும் தகவல்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதையும் நீங்கள் பார்க்கலாம் மற்றும் உங்கள் தகவல்களை எக்ஸ்போர்ட் செய்யலாம். உங்கள் தகவல்களின் நகலை ஏற்றுமதி செய்வது எப்படி என்பதை அறிக.
- உங்கள் கேட்டலைப் பொறுத்து, உருவாக்கப்படும் உள்ளடக்கம் எங்களின் சமூகத் தரநிலைகள் அல்லது Metaவின் தளங்களின் சேவை விதிமுறைகளுக்கு எதிராக இருக்கலாம். இந்தத் தரநிலைகளுக்கு எதிராக AI-உருவாக்கிய உள்ளடக்கத்தை எங்கள் தளங்களில் பகிர்வது, எங்கள் தரநிலைகளுக்கு எதிரான பிற உள்ளடக்கங்களைப் பகிர்வதைப் போலவே கருதப்படும். எங்கள் தரநிலைகளுக்கு எதிராக உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்தை நீங்கள் பகிர்ந்தால், உங்கள் உள்ளடக்கம் அகற்றப்படலாம், மேலும் உங்கள் கணக்கு கட்டுப்படுத்தப்படவோ முடக்கப்படவோ நேரிடலாம். சமூகத் தரநிலைகள் மற்றும் சேவை விதிமுறைகள் குறித்து மேலும் அறிய:
- உங்கள் பிராந்தியத்தைப் பொறுத்து, உள்ளடக்கத்தையும் விளம்பரங்களையும் நபருக்கேற்றபடியாக்க AI தயாரிப்புகளுடனான உங்கள் கலந்துரையாடல்கள் பயன்படுத்தப்படலாம்.
உருவாக்கும் AI மாடல்களுக்கு Meta எவ்வாறு தகவல்களைப் பயன்படுத்துகிறது என்பதைப் பற்றி மேலும் அறிக.
தொடங்குவதற்கு:
- உங்களின் AI படங்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்க, உங்களைப் படம் எடுத்து, பதிவேற்றுங்கள். படங்கள் மற்றும் வீடியோக்களில் உங்களைப் பிறர் சேர்ப்பதையும் நீங்கள் அனுமதிக்கலாம்.
- படங்களில் அல்லது வீடியோக்களில் உங்கள் நண்பர்களைச் சேர்க்க அனுமதி கோருங்கள். பொதுவான நண்பர்களின் அமைப்புகளைப் பொறுத்து, அவர்களது படங்களையும் வீடியோக்களையும் உங்களால் உருவாக்க முடியும்.
உங்களின் AI படங்கள் மற்றும் வீடியோக்களை நீங்களே உருவாக்கத் தொடங்கும் விதம்
உங்களின் படங்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்க, வைபுகள் செயலியில் உங்கள் படங்களை நீங்கள் சேர்க்க வேண்டியிருக்கும். உங்களின் படங்கள் அல்லது வீடியோக்களை மற்றவர்கள் உருவாக்க அனுமதிப்பதையும் நீங்கள் தேர்வுசெய்யலாம்.
தொடங்குவதற்கு:
- வைபுகள் செயலியில்,
கீழ்ப்பகுதியில் உள்ள, சுயவிவரம் என்பதைத் தட்டுங்கள்.
- பின் வருவதைத் தட்டுங்கள்:
அமைப்புகள்.
- உங்களைப் போன்ற முகச்சாயல் என்பதைத் தட்டி, பின்னர், தொடங்குக என்பதைத் தட்டுங்கள்.
- உங்களிடம் அடுத்து கேட்கப்படுபவை:
- அனுமதிகளை அனுமதித்தல்
- செயலியைப் பயன்படுத்தி உங்களின் படத்தை எடுத்தல்
- நீங்கள் விருப்பத்தேர்வாகச் செய்யக்கூடியவை:
- உங்களின் 3 கூடுதல் படங்களைப் பதிவேற்றுங்கள். இது உங்கள் AI படங்களை மேம்படுத்த எங்களுக்கு உதவுகிறது.
- வீடியோக்களில் சேர்க்கும் வகையில் உங்கள் குரலைப் பதிவுசெய்யுங்கள்.
- உங்களைப் போன்ற முகச்சாயலில் கூடுதல் படங்களையோ உங்கள் குரலையோ சேர்க்க விரும்பவில்லை என்றால், நீங்கள் தவிர்த்திடுக என்பதைத் தட்டலாம்.
- உங்கள் படத்தை யார் பயன்படுத்தலாம் என்பதைத் தேர்வுசெய்ய, தட்டுங்கள்:
- நான் மட்டும்: உங்களின் படங்கள் மற்றும் வீடியோக்களை நீங்கள் மட்டுமே உருவாக்க முடியும்.
- நான் அனுமதிக்கும் பின்தொடர்பவர்கள்: உங்களை மீடியாவில் சேர்க்க நீங்கள் அனுமதிக்க விரும்பும் குறிப்பிட்ட பின்தொடர்பவர்களைத் தேர்வுசெய்யுங்கள். நீங்களும் அவர்களும் ஏற்கெனவே ஒருவரை ஒருவர் பின்தொடரும் நிலையில் இருக்க வேண்டும்.
- நானும் பின்தொடரும் பின்தொடர்பவர்கள்: நீங்கள் ஒருவரைப் பின்தொடர்ந்து, அவர்களும் உங்களைப் பின்தொடர்ந்தால், அவர்கள் உங்களைப் படங்களிலும் வீடியோக்களிலும் சேர்க்கலாம்.
- அனைவரும்: Meta AI அல்லது வைபுகள் செயலிகளில் உள்ள எவரும் உங்கள் படங்களையும் வீடியோக்களையும் உருவாக்கலாம்.
- முடிந்தது என்பதைத் தட்டுங்கள்.
குறிப்பு: உங்கள் வயது அல்லது நாட்டைப் பொறுத்து அனைத்து விருப்பத்தேர்வுகளையும் நீங்கள் பார்க்க முடியாமல் போகலாம்.
நீங்கள் சேர்க்கப்பட்டுள்ள மீடியாக்களைப் பார்வையிடும் மற்றும் நிர்வகிக்கும் விதம் குறித்து அறிக.
Meta AI மற்றும் வைபுகளில் உங்கள் படத்தையும் குரலையும் திருத்தும் அல்லது நீக்கும் விதம்
- வைபுகள் செயலியில்,
கீழ்ப்பகுதியில் உள்ள, சுயவிவரம் என்பதைத் தட்டுங்கள்.
- பின் வருவதைத் தட்டுங்கள்:
அமைப்புகள்.
- உங்களைப் போன்ற முகச்சாயல் என்பதைத் தட்டுங்கள். இங்கிருந்தபடி, நீங்கள் செய்யக்கூடியவை:
- உங்கள் படத்தை மீண்டும் எடுக்கலாம்:படத்தை மீண்டும் எடுத்திடுக > படத்தை எடுத்திடுக என்பதைத் தட்டுங்கள்.
- உங்கள் குறிப்புப் படங்களை மாற்றலாம்:படங்களைப் பதிவேற்றுக > படங்களை மாற்றீடு செய்க என்பதைத் தட்டுங்கள்.
- உங்கள் குரலை மீண்டும் பதிவுசெய்யலாம்:குரலை மீண்டும் பதிவுசெய்க > குரலைப் பதிவுசெய்க என்பதைத் தட்டுங்கள்.
- உங்களைப் போன்ற முகச்சாயலை நீக்குங்கள்: கீழ் நோக்கி நகர்த்தி நீக்குக என்பதைத் தட்டுங்கள். இது ஆன்போர்டிங்கின்போது நீங்கள் எடுத்த படத்தையும் குரல் பதிவையும் நீக்குகிறது.
குறிப்பு: வைபுகள் செயலியில் உங்களைப் போன்ற முகச்சாயலில் நீங்கள் செய்த எந்த மாற்றங்களும் Meta AI செயலியிலும் பயன்படுத்தப்படும்.
உங்களைப் போன்ற முகச்சாயலை நீங்கள் நீக்க விரும்பினாலும், நீங்கள் உள்ள வைபுகள் இன்னும் தெரியும் நிலையில் இருக்கும். இவை “நான் சேர்க்கப்பட்டுள்ள மீடியா” என்ற பகுதியில் இருந்து நீக்க முடியும். நீங்கள் சேர்க்கப்பட்டுள்ள மீடியாவை நீக்கும் விதம் குறித்து மேலும் அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
AI உருவாக்கிய படங்கள் அல்லது வீடியோக்களில் பயனர்களைச் சேர்க்க கோரிக்கை விடுக்கும் விதம்
பயனர்கள் தங்களைப் படங்களிலும் வீடியோக்களிலும் யார் சேர்க்கலாம் என்பதைத் தேர்வுசெய்யலாம், அது தான் மட்டும், பொதுவான பின்தொடர்பவர்கள், Meta AI அல்லது வைபுகள் செயலிகளைப் பயன்படுத்தும் எவரும் என்பதாக இருக்கலாம். ஒருவரைப் படங்களிலும் வீடியோக்களிலும் சேர்க்க, நீங்களும் அவருக்குக் கோரிக்கை விடுக்க முடியும்.
Meta AI மற்றும் வைபுகளில் பயனர்கள் உங்களை மீடியாவில் சேர்க்க அனுமதிக்கும் விதம்
ஒருவர் உங்களின் படங்கள் அல்லது வீடியோக்களை உருவாக்க வேண்டுமானால், அவர்களுக்கு உங்கள் அனுமதி அவசியமாகும். உங்கள் அனுமதி அமைப்புகளை மாற்ற:
- வைபுகள் செயலியில்,
கீழ்ப்பகுதியில் உள்ள, சுயவிவரம் என்பதைத் தட்டுங்கள்.
- பின் வருவதைத் தட்டுங்கள்:
அமைப்புகள்.
- உங்களைப் போன்ற முகச்சாயல் என்பதைத் தட்டி, பின்னர் உங்களை மீடியாவில் யார் சேர்க்கலாம் என்பதைத் தேர்ந்தெடுங்கள்:
- நான் மட்டும்: உங்களின் படங்கள் மற்றும் வீடியோக்களை நீங்கள் மட்டுமே உருவாக்க முடியும்.
- நான் அனுமதிக்கும் பின்தொடர்பவர்கள்: உங்களை மீடியாவில் சேர்க்க நீங்கள் அனுமதிக்க விரும்பும் குறிப்பிட்ட பின்தொடர்பவர்களைத் தேர்வுசெய்யுங்கள். நீங்களும் அவர்களும் ஏற்கெனவே ஒருவரை ஒருவர் பின்தொடரும் நிலையில் இருக்க வேண்டும்.
- நான் பின்தொடரும் பின்தொடர்பவர்கள்: நீங்கள் ஒருவரைப் பின்தொடர்ந்து, அவர்களும் உங்களைப் பின்தொடர்ந்தால், அவர்கள் உங்களை மீடியாவில் சேர்க்கலாம்.
- அனைவரும்: Meta AI மற்றும் வைபுகள் செயலிகளில் உள்ள எவரும் உங்கள் படங்களையும் வீடியோக்களையும் உருவாக்கலாம்.
குறிப்பு: உங்கள் வயது அல்லது நாட்டைப் பொறுத்து அனைத்து விருப்பத்தேர்வுகளையும் நீங்கள் பார்க்க முடியாமல் போகலாம்.
ஒருவர் உங்களைப் போன்ற முகச்சாயலைப் பயன்படுத்தினால், உங்களுக்குத் தெரிவிக்கப்படும். உங்கள் அறிவிப்புகளை Meta AI மற்றும் வைபுகளில் மாற்றும் விதம் குறித்து அறிக. ஒருவர், நீங்கள் சேர்க்கப்பட்டுள்ள படம் அல்லது வீடியோ உருவாக்கினால், அதை நீக்குவதை நீங்கள் தேர்வுசெய்யலாம். நீங்கள் சேர்க்கப்பட்டுள்ள மீடியாவை நீக்கும் விதம் குறித்து மேலும் அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
குறிப்புகள்:
- உங்கள் அனுமதிகளை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் மாற்றலாம்.
- உங்கள் அனுமதிகள் Meta AI மற்றும் வைபுகள் செயலிகள் என இரண்டிற்கும் பொருந்தும்.
- நீங்கள் ஒருவரைப் பின்தொடர்வதை நிறுத்துவதை அல்லது அவர்களைத் தடுப்பதைத் தேர்ந்தெடுத்தால், அவர்கள் இனி உங்களைச் சேர்த்து புதிய படங்கள் அல்லது வீடியோக்களை உருவாக்க முடியாது. அவர்கள் உருவாக்கிய முந்தைய மீடியாக்கள் அனைத்தும் அப்படியே இருக்கும்; இருப்பினும், நீங்கள் அதனை நீக்கலாம்.
Meta AI மற்றும் வைபுகளில் உள்ள மீடியாக்களில் தங்களைச் சேர்க்குமாறு பிறரிடம் கேட்கும் விதம்
ஒரு வைபை ரீமிக்ஸ் செய்யும்போது தன்னை வைபில் சேர்க்குமாறு அவர்களைக் கேட்க:
- சேர்த்திடுக என்பதைத் தட்டுங்கள்.
- கோரிக்கை என்பதைத் தட்டுங்கள். Meta AI, வைபுகள் செயலிகள் மற்றும் Instagram இல் உங்கள் நண்பர்களை நீங்கள் காண்பீர்கள்.
- அவர்களின் பெயருக்கு அடுத்துள்ள கோரிக்கை என்பதைத் தட்டுங்கள்.
நீங்கள் ஒருவருக்கு ஒரு கோரிக்கையை அனுப்பும்போது:
- Meta AI மற்றும் வைபுகளில் நீங்கள் உருவாக்கும் படங்கள் மற்றும் வீடியோக்களில் நீங்கள் அவர்களைச் சேர்க்க விரும்புவது அவர்களுக்குத் தெரிவிக்கப்படும்.
- அவர்கள் Meta AI அல்லது வைபுகள் செயலியை இன்னும் பதிவிறக்கம் செய்யவில்லை என்றால், அதனைப் பதிவிறக்கம் செய்ய அவர்கள் அழைக்கப்படுவார்கள்.
- அவர்கள் இன்னும் ஒரு முகச்சாயலை உருவாக்கவில்லை என்றால், அதனை உருவாக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுவார்கள்.
அவர்கள் உங்கள் கோரிக்கையை ஏற்றுக் கொண்டால், உங்களுக்குத் தெரிவிக்கப்படும், பின்னர் நீங்கள் அவர்களின் படங்களையும் வீடியோக்களையும் உருவாக்கத் தொடங்கலாம். Meta AI செயலியில் உங்கள் அறிவிப்புகளை மாற்றும் விதம் குறித்து அறிக.
பயனர்களைச் சேர்த்து படங்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்கும் விதம்
ஏற்கெனவே உள்ள வைபில் நீங்கள் உங்களை அல்லது பிறரைச் சேர்க்க ரீமிக்ஸ் செய்யலாம் அல்லது உங்களின் அல்லது பிறரின் புதிய படங்கள் அல்லது வீடியோக்களை உருவாக்கலாம்.
உங்களைப் பற்றிய படங்களையும் வீடியோக்களையும் உருவாக்குதல்
ஏற்கெனவே உள்ள ஒரு வைபை ரீமிக்ஸ் செய்து, அதில் உங்களையும் சேர்க்க:
- பயனர்களைக் கொண்ட ஒரு வைபைத் தேர்வுசெய்யுங்கள்.
- பின் வருவதைத் தட்டுங்கள்:
நீங்கள் ரீமிக்ஸ் செய்ய விரும்பும் பதிவில் உள்ள ரீமிக்ஸ்
- சேர்த்திடுக என்பதைத் தட்டுங்கள்.
- உங்களின் படத்தைத் தட்டுங்கள்.
வைபுகளை ரீமிக்ஸ் செய்தல் பற்றி மேலும் அறிக.
புதிய படம் அல்லது வீடியோவில் உங்களைச் சேர்க்க:
- வைபுகள் செயலியைத் திறந்திடுங்கள்.
- பின் வருவதைத் தட்டுங்கள்:
உருவாக்குக
- படம் அல்லது வீடியோவை விவரித்திடுக…பெட்டியில் உங்கள் கேட்டலை நிரப்பி, உங்கள் விளக்கத்தில் “நான்” அல்லது “என்னை” என்ற வார்த்தைகளைச் சேர்த்திடுங்கள். எடுத்துக்காட்டாக, "நான் விண்வெளி வீரராக உள்ள எனது வீடியோவை உருவாக்குக."
- பின் வருவதைத் தட்டுங்கள்:
அனுப்புக.
Meta AI மற்றும் வைபுகளைப் பயன்படுத்தி படங்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்குவது பற்றி மேலும் அறிக.
வேறு ஒருவரின் படங்களையும் வீடியோக்களையும் உருவாக்குதல்
ஏற்கெனவே உள்ள ஒரு வைபை ரீமிக்ஸ் செய்ய:
- பயனர்களைக் கொண்ட ஒரு வைபைத் தேர்வுசெய்யுங்கள்.
- பின் வருவதைத் தட்டுங்கள்:
நீங்கள் ரீமிக்ஸ் செய்ய விரும்பும் பதிவில் உள்ள ரீமிக்ஸ்
- சேர்த்திடுக என்பதைத் தட்டுங்கள்.
- நீங்கள் சேர்க்க விரும்பும் நபரின் பெயரைத் தட்டுங்கள். ஒரே நேரத்தில் ஒருவரை மட்டுமே நீங்கள் சேர்க்கலாம் (உங்களையும் சேர்த்து).
வைபுகளை ரீமிக்ஸ் செய்தல் பற்றி மேலும் அறிக.
புதிய படம் அல்லது வீடியோவில் பயனர்களைச் சேர்க்க:
- வைபுகள் செயலியைத் திறந்திடுங்கள்.
- பின் வருவதைத் தட்டுங்கள்:
உருவாக்குக
- படம் அல்லது வீடியோவை விவரித்திடுக…பெட்டியில் உங்கள் கேட்டலை நிரப்பி, "@" என்பதைச் சேர்த்து, பின்னர் படம் அல்லது வீடியோவில் நபரின் பயனர்பெயரைச் சேர்த்திடுங்கள். ஒரே நேரத்தில் நீங்கள் இரண்டு பேர் வரை சேர்க்கலாம் (உங்களையும் சேர்த்து).
- பின் வருவதைத் தட்டுங்கள்:
அனுப்புக.
Meta AI மற்றும் வைபுகளைப் பயன்படுத்தி படங்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்குவது பற்றி மேலும் அறிக.
நீங்கள், ஒருவர் சேர்க்கப்பட்டுள்ள வைபு ஒன்றைப் பதிவிட்டால், அவர்களுக்குத் தெரிவிக்கப்படும்.
நீங்கள் உருவாக்கிய வைபுகள் மற்றும் வரைவுகள் (நீங்கள் இன்னும் பதிவிடாத வரைவுகள் உட்பட) அதில் இடம்பெறும் நபரால் பார்க்கப்படவும், நீக்கப்படவும் செய்யலாம்:
- நீங்கள் வைபில் இடம்பெறச் செய்யும் நபர், அவர் சேர்க்கப்பட்டுள்ள உங்கள் பொது வைபுகள் அல்லது வரைவுகளை நீக்குவதைத் தேர்வுசெய்யலாம். பொது வைபுகளைப் பொறுத்த வரையில், ஏதேனும் ஒரு விஷயம் நீக்கப்படும்போது உங்களுக்கு ஒரு அறிவிப்பு வரும்.
- வரைவுகள் நீக்கப்படும்போது உங்களுக்கு அறிவிப்பு வராது. ஒரு வரைவு விடுபட்டிருப்பதை நீங்கள் கவனித்தால், நீங்கள் இடம்பெறச் செய்த நபரால் அது நீக்கப்பட்டிருக்கலாம்.
நீங்கள் சேர்க்கப்பட்டுள்ள மற்றவர்களின் வைபுகளை நீக்கும் விதம்
- வைபுகள் செயலியில்,
கீழ்ப்பகுதியில் உள்ள, சுயவிவரம் என்பதைத் தட்டுங்கள்.
- பின் வருவதைத் தட்டுங்கள்:
அமைப்புகள்.
- உங்களைப் போன்ற முகச்சாயல் என்பதைத் தட்டுங்கள், பின்னர் நான் சேர்க்கப்பட்டுள்ள மீடியா என்பதைத் தட்டுங்கள்.
- வைபுகள்:
விருப்பத்தேர்வு என்பதைத் தட்டி, பின்னர் நீக்குக என்பதைத் தட்டுங்கள்.
- வரைவுகள்: வரைவு என்பதைத் தட்டி, பின்னர் நீக்குக என்பதைத் தட்டுங்கள்.
Meta AI அல்லது வைபுகள் செயலியில், நீங்கள் சேர்க்கப்பட்டுள்ள ஒரு வைபை உருவாக்கிப் பதிவிட ஒருவர் 'சேர்த்திடுக' அம்சத்தைப் பயன்படுத்தும்போது, உங்களுக்கு தெரிவிக்கப்படும். நீங்கள் சேர்க்கப்பட்டுள்ள, பொதுவான வைபுகள் அல்லது வரைவுகளை நீக்குவதை எப்போது வேண்டுமானாலும் நீங்கள் தேர்வுசெய்யலாம். நீங்கள் ஒரு பொது வைபை நீக்கும்போது, அதனை உருவாக்கியவருக்குத் தெரிவிக்கப்படும். நீங்கள் ஒரு வரைவை நீக்கும்போது, அதனை உருவாக்கியவருக்குத் தெரிவிக்கப்படாது.
குறிப்பு:
- பிற அரட்டைகளைப் போலவே, AI உடனான அரட்டைகளும் எங்களது <சமூகத் தரநிலைகள் மற்றும் சேவை விதிமுறைகள் ஆகியவற்றுக்கு உட்பட்டவையாகும்.
- ஒரு AI இன் பதில் துல்லியமற்றதாகவோ தகாததாகவோ இருக்கலாம் எனவே, முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு இதனைப் பயன்படுத்தக்கூடாது.
- Metaவில் AIஐ மேம்படுத்த, AIகளுடனான உங்கள் கலந்துரையாடல்களை Meta பயன்படுத்துகிறது. AIகள் உங்கள் கேள்விக்குப் பதிலளிக்க முடியவில்லை எனில், நீங்கள் AIக்கு அனுப்பும் மெசேஜ்களையும், நீங்கள் உள்ள பிராந்தியம் போன்ற பொதுத் தகவல்களைத் தேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டாளர்களுடன் Meta பகிர்கிறது, இதனால் நீங்கள் சிறந்த விளைவுகளைப் பெற முடியும். மேலும் அறிய எங்களது Meta AI இன் சேவை விதிமுறைகள் என்பதற்குச் செல்லுங்கள்.
- Meta AI, உங்களுக்கு மிகவும் பொருத்தமான பதில்களை வழங்க உங்கள் இருப்பிடத் தகவல்களைப் பயன்படுத்துகிறது. உங்கள் இருப்பிடத் தகவல்கள், உங்கள் சாதனத்தில் நீங்கள் தேர்ந்தெடுத்த அமைப்புகள் அல்லது எங்கள் தயாரிப்புகள் முழுவதும் உங்கள் செயல்பாடுகள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டவை. தனியுரிமை மையத்தில் உங்கள் இருப்பிடத்தை எவ்வாறு நிர்வகிப்பது என்பது பற்றி மேலும் அறிக.
- உங்கள் வயது மற்றும் பாலினம் போன்ற உங்கள் சுயவிவரத்தில் உள்ள பிற தகவல்கள் மற்றும் விளம்பரங்கள் உட்பட நீங்கள் பார்க்கும் அல்லது செயலை மேற்கொள்ளும் உள்ளடக்கத்தின் வகைகள் மற்றும் அதனுடன் நீங்கள் எவ்வாறு செயலை மேற்கொள்கிறீர்கள் போன்ற எங்களது தயாரிப்புகளில் உங்கள் செயல்பாட்டின் அடிப்படையிலான ஆர்வங்கள் ஆகியவை AI உடனான உங்கள் கலந்துரையாடல்களை நபருக்கேற்றபடியாக்க உதவும் வகையில் பயன்படுத்தப்படும். இந்தத் தகவல்களை Meta பயன்படுத்தும் விதம் பற்றி தனியுரிமை மையம் என்பதில் மேலும் அறியுங்கள். அதே கணக்குகள் மையத்தில் உங்கள் கணக்குகள் அனைத்திலும் தகவல்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதையும் நீங்கள் பார்க்கலாம் மற்றும் உங்கள் தகவல்களை எக்ஸ்போர்ட் செய்யலாம். உங்கள் தகவல்களின் நகலை ஏற்றுமதி செய்வது எப்படி என்பதை அறிக.
- உங்கள் கேட்டலைப் பொறுத்து, உருவாக்கப்படும் உள்ளடக்கம் எங்களின் சமூகத் தரநிலைகள் அல்லது Metaவின் தளங்களின் சேவை விதிமுறைகளுக்கு எதிராக இருக்கலாம். இந்தத் தரநிலைகளுக்கு எதிராக AI-உருவாக்கிய உள்ளடக்கத்தை எங்கள் தளங்களில் பகிர்வது, எங்கள் தரநிலைகளுக்கு எதிரான பிற உள்ளடக்கங்களைப் பகிர்வதைப் போலவே கருதப்படும். எங்கள் தரநிலைகளுக்கு எதிராக உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்தை நீங்கள் பகிர்ந்தால், உங்கள் உள்ளடக்கம் அகற்றப்படலாம், மேலும் உங்கள் கணக்கு கட்டுப்படுத்தப்படவோ முடக்கப்படவோ நேரிடலாம். சமூகத் தரநிலைகள் மற்றும் சேவை விதிமுறைகள் குறித்து மேலும் அறிய:
- உங்கள் பிராந்தியத்தைப் பொறுத்து, உள்ளடக்கத்தையும் விளம்பரங்களையும் நபருக்கேற்றபடியாக்க AI தயாரிப்புகளுடனான உங்கள் கலந்துரையாடல்கள் பயன்படுத்தப்படலாம்.
உருவாக்கும் AI மாடல்களுக்கு Meta எவ்வாறு தகவல்களைப் பயன்படுத்துகிறது என்பதைப் பற்றி மேலும் அறிக.
இப்போதைக்கு, உங்களின் அல்லது பிறரின் படங்களையும் வைபுகளையும் உருவாக்க Meta AI அல்லது வைபுகள் செயலியைப் பயன்படுத்தவேண்டியிருக்கும். ஒருவர் “சேர்ந்திடுக” அம்சத்தைப் பயன்படுத்தி உங்களைத் தங்கள் வைபில் சேர்த்தால், அதனை Meta AI அல்லது வைபுகள் செயலியில் நீக்குவதை எப்போது வேண்டுமானாலும் நீங்கள் தேர்வுசெய்யலாம். நீங்கள் சேர்க்கப்பட்டுள்ள பொதுவான வைபுகள் அல்லது வரைவுகளை நீங்கள் நீக்கலாம்.