Meta தயாரிப்புகளில் AI படைப்பு அடையாளம் காணப்படும் விதம்
உருவாக்கும் செயற்கை நுண்ணறிவு (உருவாக்கும் AI) என்பது புதிய வழிகளில் படங்கள் மற்றும் வாசகம் போன்ற படைப்பை உருவாக்கவோ திருத்தவோ உதவும் ஒரு கருவியாகும்.
உருவாக்கும் AI செயல்படும் விதம்
உருவாக்கும் AI மாதிரிகள் பில்லியன் கணக்கான தகவல்களைப் பயன்படுத்தி பயிற்றுவிக்கப்படுகின்றன. புதிய படைப்பை உருவாக்க, கேட்டல்கள் அல்லது அறிவுறுத்தல்களின் அடிப்படையில் இந்தத் தகவல்களுக்கு இடையே உள்ள வடிவங்களையும் உறவுநிலைகளையும் பற்றி உருவாக்கும் AI மாதிரிகள் கற்றுக்கொள்கின்றன.
எடுத்துக்காட்டாக, பூக்கள் நிறைந்த புல்வெளியில் ஓடும் 3 பழுப்பு நிற நாய்களின் படத்தைக் கேட்டு உருவாக்கும் AI கருவியில் கோரிக்கையை நீங்கள் தட்டச்சு செய்யலாம். அல்லது ஷேக்ஸ்பியர் போன்ற ஒரு வரலாற்று ஆளுமையின் நடையில் எழுதப்பட்ட நகைச்சுவையை வழங்குமாறு கோரலாம்.
Meta தயாரிப்புகளில் AI உருவாக்கிய படைப்பை அடையாளம் காணும் விதம்
AI கருவிகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட அல்லது திருத்தப்பட்ட படைப்பு, Meta தயாரிப்புகள் முழுவதும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்த உதவும் வகையில் அடையாளம் காணப்படலாம் மற்றும் லேபிளிடப்படலாம்.
படைப்பை உருவாக்குவதற்கு அல்லது திருத்துவதற்கு பல AI கருவிகள் உள்ளன. இந்தக் கருவிகளில் ஒன்றைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட அல்லது திருத்தப்பட்ட சில படைப்புகள், AI கருவிகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட அல்லது திருத்தப்பட்ட படைப்பை அடையாளம் காணும் தொழில்முறை-தரம் கொண்ட சிக்னலைக் கொண்டிருக்கலாம். எடுத்துக்காட்டாக, ஒரு நபர் ஒரு படத்தைப் பொதுவான படம் திருத்தும் கருவியைப் பயன்படுத்தித் திருத்தி, தன்னைப் பின்தொடர்பவர்களிடம் பகிரலாம்.
படம் திருத்தும் கருவியானது படத்தின் அளவையோ நிறத்தையோ மாற்ற AIஐப் பயன்படுத்துகிறதெனில், இந்தப் படம் AIஐப் பயன்படுத்தித் திருத்தப்பட்டது என்பதைக் காண்பிக்கும் சிக்னலை அப்படம் கொண்டிருக்கும். இந்த சிக்னல்கள் படைப்புக்கு லேபிள் தேவையா இல்லையா என்பதைக் தீர்மானிக்க Metaவின் அமைப்புகளால் வாசிக்கப்படுகின்றன.
Meta தயாரிப்புகளில் AI உருவாக்கிய படைப்பு லேபிளிடப்படும்போது
Meta தயாரிப்புகளில் இயல்பாகப் பரவும் பகிர்வு அல்லது விளம்பரம் அல்லாத ஒரு படைப்பு லேபிளிடப்படுவதில் சில வழிகள் உள்ளன.
- இயல்பாகப் பரவும் பகிர்வில் Metaவின் அமைப்புகள் AI சிக்னல்களைக் கண்டறியும்போது
- பயனர்கள் தங்களது AI-உருவாக்கிய படைப்பை லேபிளிடும்போது
மூன்றாம் தரப்புக் கருவிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட படைப்பானது, அது AI மூலம் உருவாக்கப்பட்டதா அல்லது திருத்தப்பட்டதா என்பதைக் காண்பிக்கும் சிக்னல்களைக் கொண்டிருக்கலாம். AI மூலம் உருவாக்கப்பட்டது என்பதைக் குறிக்கும் சிக்னல்களைக் கொண்ட படைப்பு AI தகவல் என லேபிளிடப்படும். AIஐப் பயன்படுத்தி திருத்தப்பட்டது என்பதைக் குறிக்கும் சிக்னல்களைக் கொண்ட படைப்பானது, அதன் பதிவு, ஸ்டோரி, ரீல் அல்லது தொடரிணைப்பில் நேரடியாக AI தகவல் என்ற லேபிளைக் கொண்டிருக்காது. மெனுவைக் கிளிக் செய்வதன் மூலம் AI மூலம் பதிவு, ஸ்டோரி, ரீல் அல்லது தொடரிணைப்பு திருத்தப்பட்ட விதம் பற்றி மேலும் அறியலாம்.
Meta தயாரிப்புகளைப் பயன்படுத்தும் பயனர்கள், AI-உருவாக்கிய படைப்பு அல்லது AIஐப் பயன்படுத்தி திருத்தப்பட்ட படைப்பைப் பகிரும்போதும், தங்களது படைப்பில் AI தகவல் என லேபிளிடலாம், சில சந்தர்ப்பங்களில், அவ்வாறு செய்வது தேவையாகவும் இருக்கலாம்.
Meta தொழில்நுட்பங்கள் முழுவதும் AI-உருவாக்கிய படைப்பைப் பற்றி மேலும் விஷயங்கள் அறியப்படுவதால், வெளிப்படைத்தன்மை தொடர்பான அணுகுமுறையை Meta தொடர்ந்து புதுப்பிக்கலாம்.
நீங்கள் பார்க்கக்கூடிய பிற லேபிள்கள்
Metaவின் AI கருவிகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டு அல்லது திருத்தப்பட்டு, Facebook, Instagram அல்லது Threads இல் பதிவு, ஸ்டோரி, ரீல் அல்லது Threads வடிவில் பகிரப்படும் எந்தவொரு படைப்பும் அதுவாகவே AI படைப்பு என்பதாக லேபிளிடப்படலாம் அல்லது சில சந்தர்ப்பங்களில், அவற்றுள் தெரியும்படியான வாட்டர்மார்க் இடம்பெற்றிருக்கலாம்.
குறிப்பு: எல்லா AI படைப்புகளும் அதனை அடையாளம் காணத் தேவையான தகவல்களைக் கொண்டிருப்பதில்லை.
AI தகவல் என்ற லேபிள் தேவைப்படும்போது
படைப்பில், AI மூலம் உருவாக்கப்பட்டது உட்பட, டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்ட, திருத்தப்பட்ட அல்லது மாற்றியமைக்கப்பட்ட நிஜமானது போல் தோன்றும் வீடியோ அல்லது நிஜமானது போல் ஒலிக்கும் ஆடியோ இடம்பெற்றிருந்தால், அதற்கான AI லேபிள் Metaவுக்குத் தேவைப்படுகிறது.
குறிப்பு: லேபிள் இல்லாமல் பகிரப்படும் படைப்பிற்கு, அவசியமான சூழலில் அபராதம் விதிக்கப்படலாம்.
AI மூலம் உருவாக்கப்பட்ட அல்லது திருத்தப்பட்ட படங்களுக்கான லேபிள் Metaவில் கட்டாயமாக்கப்படவில்லை. இருப்பினும், இந்தப் படங்கள் AI-உருவாக்கியவை அல்லது AIஐப் பயன்படுத்தி திருத்தப்பட்டவை என்பதை அமைப்புகள் கண்டறிந்தால் அவற்றுக்கு லேபிள் வழங்கப்படலாம்.
லேபிள் தேவைப்படும் டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்ட படைப்புக்கான எடுத்துக்காட்டுகள்:
- திறந்தவெளிச் சந்தையைச் சுற்றி மக்கள் கூட்டம் நடந்து செல்லும் நிஜம் போல் தோன்றும் வீடியோ
- இரண்டு பேர் பேசும் ஆடியோ கோப்பு
- AI-உருவாக்கிய குரல்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பாடல்
- நிஜம் போல் தோன்றும் முறையில் AI-உருவாக்கிய வாய்ஸ்ஓவர் மூலம் வர்ணனை இடம்பெறும் ரீல்
லேபிள் தேவைப்படாத டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்ட படைப்புக்கான எடுத்துக்காட்டுகள்:
- கார்ட்டூன் போன்ற பாணியில் உருவாக்கப்பட்ட திறந்தவெளி நிலப்பரப்பின் வீடியோ
- காளை மீது சவாரி செய்யும் நபரின் படம் (படங்களுக்கான லேபிள் Metaவில் கட்டாயமாக்கப்படவில்லை.)
இந்தத் தேவை குறித்து வெளிப்படைத்தன்மை மையத்தில் மேலும் படிக்கலாம்.
குறிப்பு: எங்கள் தளங்களில் AI-உருவாக்கிய படைப்பைப் பற்றி மேலும் அறிகையில், எங்கள் வெளிப்படைத்தன்மை அணுகுமுறையைப் புதுப்பிப்போம். தனியுரிமை மையத்தில் உருவாக்கும் AI பற்றி மேலும் அறிக.